இந்த ஆண்டுக்கான புதிய கோவிட் பாதிப்புகளின் மிகப்பெரிய ஒரு நாள் எண்ணிக்கையை ரஷ்யா பதிவு செய்துள்ளது.
ரஷ்யா இன்று 27,550 புதிய கோவிட் -19 பாதிப்புகளை பதிவு செய்தது என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ரஷ்யா பதிவு செய்த மிகப்பெரிய ஒரு நாள் எண்ணிக்கையாக இது உள்ளது.
இந்த மோசமான நிலையை அடுத்து, மக்களை தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 924 பேர் கொரோனா காரணங்களால் இறந்துள்ளதாகவும், இது ஒரு நாள் சாதனையை நெருங்குவதாகவும் அரசு கொரோனா வைரஸ் பணிக்குழு தெரிவித்துள்ளது.