தொடர்ந்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் லா பால்மா எரிமலை

ஸ்பெய்னில் உள்ள லா பால்மா தீவில் தீக்குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் எரிமலை தொடர்ந்தும் அண்மித்த பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

வெளிவரும் செந்நிற தீக்குழம்புகள் கெலிஜொன் டி லா கட்டா கிராமத்திலுள்ள நான்கு கட்டடங்களை சேதப்படுத்தியுள்ளன.

சனிக்கிழமை மாத்திரம் 37 முறை தொடர்ச்சியான குமுறல்கள் பதிவாகியுள்ளன.

இதுவரை 1150 வீடுகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

செப்டெம்பர் 19ஆம் திகதி குமுற ஆரம்பித்த எரிமலையினால் 480 ஹெக்டேயர் நிலப்பரப்பு கருகியுள்ளன.

இதுவரை 6000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தீவின் வான் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கடும் வெப்பத்துடனான உஷ்ண அலைகளும் சாம்பலும் வானை மறைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.