கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ளது சிங்கப்பூர்

 

பிரித்தானியா உட்பட சில நாடுகளிலிருந்து வருகின்றவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

கொவிட் 19 உடன் வாழ்வதற்கான தந்திரோபாயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்ட பயண விதிமுறை ஜேர்மனி மற்றும் ப்ரூனே நாடுகளில் வெற்றியளித்துள்ளது.

தொற்றை கட்டுப்படுத்த சிங்கப்பூர் கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்தியிருந்தது.

கொவிட் தொற்றுடன் தொடர்புடைய உயிரிழப்புகள் தற்போது குறைவடைந்துள்ளன.ஆனால்  கட்டுப்பாடுகள் தெற்காசியாவின் வர்த்தக மையமாக இருக்கும் சிங்கப்பூருக்கு பாரிய பொருளாதார நட்டத்தை ஏற்படுத்தியது.

டெல்டாவோ கொரோனாவோ முற்றாக ஒழியவில்லை.அதேபோன்று சக இடைவெளியும்,தடுப்;பூசி செலுத்திக்கொள்வதும் கண்காணிக்கப்படுவதாக தொலைக்காட்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் போதே தெரிவி;த்துள்ளார்.

வழமைக்கு மாறான புதிய வாழ்க்கைக்கு பழக புpய முறைகள் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கனடா,டென்மார்க்,பிரான்ஸ்,இத்தாலி,நெதர்லாந்து,ஸ்பெய்ன்,அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவும் நவம்பரிலிருந்து தென்கொரியாவிலிருந்து வருகை தரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பயணிகள் தனிமைப்படுத்தலின்றி நாட்டுக்கு வருகை தர முடியும் என அறிவித்துள்ளது சிங்கப்பூர்.

இந்த நடைமுறை ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.