கனடாவில் அண்மையில் ஓரினச்சேர்க்கை தமிழ் பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தில் குறித்த பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை தொலைபேசியில் மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 47 வயதுடைய சட்டவாளர் உமாநந்தினி நிஷநாதன் என்பவரை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
கென்னடி சாலை, எக்லிண்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் நடந்த குற்றம் தொடர்பாக அவரை கைது செய்துள்ளதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் திருமணத்தை நடத்திய குருக்களை செப்டம்பர் 28 அன்று தொலைபேசயில் தொடர்பு கொண்ட உமாநந்தினி, அவரை மிரட்டியதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த குருக்கள் “பல மிரட்டல் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றதாகவும்” கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை, டொராண்டோவைச் சேர்ந்த உமாநந்தினி நிஷநாதன் என்பவரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
கைதானவர் மீது மிரட்டல் மற்றும் கிரிமினல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்த பொலிஸார்.
நவம்பர் 16 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.