ஒருவார காலப்பகுதியில் இரண்டு முறை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்தமைக்கு பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் சுமார் 8 மணி நேரம் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்திருந்தன.
இதைப் போல், நேற்றைய தினமும் இரண்டு மணிநேர செயலிழப்பு ஏற்பட்டது.
இதனால், பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளும் பாதிக்கப்பட்டன.
எனினும் இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், சேவைகள் வழமைக்கு திரும்பியதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.